பழமொழிகள் (Proverb) ஒரு சமுதாயத்தின் பழமையான சிந்தனையும், அறிவுச் சொத்தும், நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகளும் ஆகும்.

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும்!

வணக்கம்,

நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ஒரு சில செய்கையை குறிக்கவும், அதன் மூலம் கருத்து சொல்லவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நம் முன்னோர்கள், பழமொழிகளை சொல்லி வந்தனர்.

பழமொழி என்பது ஏதாவது ஒரு செய்கையை குறிக்கவோ, ஒரு செயலுக்கு விளக்கம் தரவோ சொல்லப்படுகிறது. பழமொழிகள் அனுபவத்துடன் சேர்த்து, அறிவுரையும் சொல்லும்.

வழக்காற்றில் இருக்கும் பல பழமொழிகளுக்கு அதற்குரிய அர்த்தங்கள் சொல்லப்படாமல், நாளடைவில் மருவி வேறு ஏதோ அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. அவ்வாறு சொல்லப்படும் சில பழமொழிகளின் சரியான விளக்கங்களை இணையத்தில் பல பதிவுகளை தேடி படித்து இங்கு பகிர்ந்துள்ளேன்.

பழமொழிகள் (Proverb) ஒரு சமுதாயத்தின் பழமையான சிந்தனையும், அறிவுச் சொத்தும், நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகளும் ஆகும்.!!! பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை பெரும்பாலும் பதிவு செய்யப்படாத வாய்மொழி வழக்காகவும், நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்தச் சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவுகின்றன.


1.யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்!

பலரும் அறிந்த #பழமொழி இது.

ஆனால், இது தவறு!! 👎

சரியான பழமொழி: *ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால், பூநெய்க்கு ஒரு காலம் வரும்!* 👍

ஆநெய் ஆனை ஆகியிருந்தால் கூட பரவாயில்லை. யானை ஆகிவிட்டது. இதையொட்டி, பூநெய் பூனை ஆகிவிட்டது. 😁  ஆநெய் பேச்சு வழக்கில் ஆனை ஆகியிருக்கலாம். இது தவறு என்று நினைத்த தமிழ் விரும்பி யாரேனும் ஆனையை யானையாக மாற்றியிருப்பார்!! 😂)

*இப்பழமொழி ஒரு மருத்துவக் குறிப்பு!*

#ஆநெய் = ஆ + நெய் = பசுவின் நெய்

#பூநெய் = பூ + நெய் = பூவிலிருந்து உருவாகும் தேன்

“ஓடியாடி நன்றாக உடல் உழைப்பு உள்ள காலம் வரையில் நெய்யை அதிகமாகவும், பின்னர் நெய்யை குறைத்தும், எளிதில் செரிமானமாகக் கூடியதும் மருத்துவ குணம் நிறைந்ததுமாகிய தேனை அதிகமாகவும் சேர்த்துக் கொள்ளவேண்டும்” என்பது இப்பழமொழியின் பொருள்!! 👏👏👏

2."கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்ற பழமொழி தமிழில் உள்ளது. அது தவறான கருத்து.

உண்மை பழமொழி என்னவென்றால்" கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை" இந்த பழமொழியானது நாளடைவில் மருவி அவ்வாறு ஆனது.

முன்னொரு காலத்தில் கழு என்ற ஒரு வகை கோரைப்புல் இருந்தது. அதில் இருந்து பாய் முனைந்தனர். அதனை முனையும்(தைக்கும்) பொழுது கற்பூர வாசனை வருமாம். இதனையே முன்னோர்கள் "கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை" என்று கூறினர். அது நாளடைவில் மருவி தற்பொழுது "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று ஆனது.

3. கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் கானோம் (இப்போது வழக்கில் உள்ளது)

அதாவது கல் கிடைத்தால் அடிப்பதற்கு நாய் இல்லை. நாயை பார்த்தால் அடிப்பதற்கு கல் கிடைப்பதில்லை

சரியான பழமொழி: கல்லைக் கண்டால் நாயகனைக் காணவில்லை.நாயகனைக் கண்டால் கல்லைக் காணவில்லை

அதாவது கோவிலிலுள்ள விக்ரகத்தை கல்லாக பார்த்தால் பகவான் (நாயகன்) தெரிவதில்லை பகவானாக பார்தால் கண்ணுக்கு கல் புலப்படுவதில்லை

நாயகன் நாயாக மாறி அனர்த்தம் விளைவித்து விட்டது.

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

Comments

Popular posts from this blog

Moongil Arisi, also called bamboo rice or Mulayari in Malayalam, grows only when bamboo plants flower.

Guava leaves (from the Psidium guajava tree) are packed with powerful nutrients

Bay Leaf (Indian name: "Tej Patta") is a fragrant leaf commonly used in Indian cooking.